ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – மேஷம்

அன்புள்ள மேஷ ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகவும் சிறப்பான பலன்களை தரக்கூடியதாக அமையும். ராகு லாபஸ்தானமான 11 ம் வீட்டில் சஞ்சரிப்பது, உங்களின் வருமானத்தைப் பெருக்கும். இதுவரை தடைபட்டிருந்த பணவரவு சீராகும். எதிர்பாராத தனலாபம் உண்டாகலாம். தொழிலில் முன்னேற்றம், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். விருப்பங்கள் நிறைவேறும் காலம் இது. கடவுள் அனுக்கிரஹம் அதிகம் உண்டு. வாகன யோகமுண்டு. அளவுக்கு அதிகமான ஆசை உண்டு. அரசியல் ஈடுபாடு உண்டு.

கேது பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் கல்வி அல்லது ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். காதலில் அதிக நாட்டம் செல்லும். பங்குச்சந்தை, லாட்டரி, குதிரை பந்தயங்கள் போன்ற சூதாட்டங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்குத் தடைகள் விலகிச் சாதிக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மீகம் மற்றும் தத்துவத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்:

கேதுவால் உண்டாகும் தடைகளை நீக்க விநாயகப் பெருமானை அருகம்புல் சார்த்தி வழிபடவும்.

திருப்பாம்புரம் அல்லது கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்குச் சென்று ராகு கேதுவை வழிபடலாம்.

நிறைந்த லாபங்கள் மற்றும் செய்யும் காரியங்களில் வெற்றி பெற, ஏழை மற்றும் முதியோர்களுக்கு உதவலாம்.

Scroll to Top