அன்புள்ள கன்னி ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகவும் சாதகமான பலன்களைத் தரக்கூடியது. ராகு ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கடன், நோய், எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுதலையைக் குறிக்கிறது. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். போட்டிகளில் சிறந்து விளங்குவீர்கள். தைரியமும் துணிச்சலும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. ஆரோக்கிய குறைபாடு உண்டு. வம்பு வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் தொழிலில் புதிய முதலீடுகளில் கவனம் தேவை. புதிதாக கடன் வாங்குவதை தவிர்க்கவும். உணவு பழக்கங்களில் கவனம் தேவை, புட் பாய்சன்(Food Poison) ஆக வாய்ப்புண்டு.
கேது விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டுத் தொடர்புகள் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிநாட்டு வருமானம் உண்டு. ஆன்மீக விஷயங்களில் மிகுந்த ஈடுபாடு உண்டாகும். தியானம், யோகா போன்றவற்றில் நாட்டம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் வரலாம், ஆனால் அவை சுபச் செலவுகளாக அமையக்கூடும். தூக்கமின்மை அல்லது கனவுத் தொல்லைகள் ஏற்படலாம். தனிமையில் சிந்திப்பது அல்லது செயல்படுவது நன்மை தரும். மோட்சம் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். கடுமையாக உழைப்பார். கெட்ட நண்பர்கள் சகவாசம் ஆகாது.
பரிகாரம்:
ரண, ருண, ரோக சத்ரு ஸ்தான ராகுவால் வெற்றிகள் குவிய, செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபடவும். முடிந்தால் கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.
விரய ஸ்தான கேதுவால் ஆன்மீக முன்னேற்றம் பெற, தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். புனித யாத்திரைகள் மேற்கொள்ள திட்டமிடலாம்.
திருச்செந்தூர் அல்லது பழனி போன்ற முருகன் கோவில்களுக்குச் சென்று வருவது நன்மை பயக்கும்.


