ராகு கேது பெயர்ச்சி பலன்கள் மே 18, 2025 – டிசம்பர் 2, 2026

அனைவருக்கும் வணக்கம்! நவக்கிரகங்களில் ஒன்றாக ராகு கேது கருதப்பட்டாலும், இவை வான்மண்டலத்தில் நிஜமாக இருக்கும் கிரகங்கள் அல்ல, நிழல் கிரஹங்களாகும். சூரியனை பூமி சுற்றும் பாதை, மற்றும் பூமியை சந்திரன் சுற்றும் பாதை – இவை இரண்டும் சந்திக்கும் புள்ளிகளே ராகு மற்றும் கேது ஆகும். இதில் வடக்குப் புள்ளி ராகு எனவும், தெற்குப் புள்ளி கேது எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விரு கிரகங்களும் எப்போதும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக 180 பாகையில் இருக்கும், மேலும் இவை எப்போதும் பின்னோக்கியே நகரும். ராகு கேதுக்கள் ஒரு ராசியை கடக்க 1 வருடம் 6 மாதங்களாகும்.

இந்த ராகு, கேது வருகின்ற மே மாதம் 18 ஆம் தேதி மாலை 7:40 மணிக்கு, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, பெயர்ச்சி ஆகின்றது. ராகு மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகி, டிசம்பர் 2 , 2026 வரை அங்கேயே இருக்கும்.

இந்த ராகு கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

கும்ப ராசியில் ராகு:

மே 18 முதல் நவம்பர் 23, 2025 வரை – பூரட்டாதி நட்சத்திரம்

நவம்பர் 23, 2025 முதல் ஆகஸ்ட் 2, 2026 வரை – சதயம் நட்சத்திரம்

ஆகஸ்ட் 2, 2026 முதல் டிசம்பர் 2, 2026 வரை – அவிட்டம் நட்சத்திரம்

சிம்ம ராசியில் கேது:

மே 18 முதல் ஜூலை 20, 2025 வரை – உத்திரம் நட்சத்திரம்

ஜூலை 20, 2025 முதல் மார்ச் 29, 2026 வரை – பூரம் நட்சத்திரம்

மார்ச் 29, 2026 முதல் டிசம்பர் 2, 2026 வரை – மகம் நட்சத்திரம்

Rahu Kethu Peyarchi Viruchigam

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – விருச்சிகம்

அன்புள்ள விருச்சிக ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு வீடு, சுகம், தொழில் ஆகியவற்றில் மாற்றங்களைக்…

Read More
Rahu Kethu Peyarchi Kumbam

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – கும்பம்

அன்புள்ள கும்ப ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் ராசியிலேயே ராகு சஞ்சரிப்பதால் முக்கிய மாற்றங்களைக் கொண்டு…

Read More

Leave a Comment

Scroll to Top