குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – கன்னி

கன்னி ராசி/லக்ன நண்பர்களே,  உங்கள் ராசிக்கு 4, 7 குரியவரான குரு பகவான்,  10 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 2, 4, 6  ஐ பார்வை இடுகிறார். தொழிலில் லாபம் உண்டு, எனினும் தொழிலில் மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இல்லையெனில் ஏமாற்றப்படுவீர். கோயில் பணிகளில் ஆர்வம் வரும். வட்டி தொழில் செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பெரும் பணம் வட்டிக்கு விடும் போது. ரியல் எஸ்டேட், வாகனம் தொழில் செய்பர்வர்களுக்கு சிறப்பாக இருக்கும். தன வரவு உண்டு. வீடு வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சிறு சச்சரவுகள் உண்டு. நோய் கடன் எதிரி வலுக்கும். இருப்பினும் உத்யோகம் சிறப்பாக இருக்கும்.

மே 14 முதல் ஜூன் 14 வரை:

குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார்.  ஜூன் 6 வரை இடமாற்றம், அலைச்சல்கள் உண்டு. எதாவது சொத்துக்கள்/வாகனங்கள் விற்க வாய்ப்பு உண்டு. வேலையில் இட மற்றம் உண்டு. தந்தை வழியில் பிரச்சனைகள் உண்டு. நண்பர்கள் வழியில் ஆதரவு உண்டு.

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் நோய் கடன் உண்டு. தொழிலில் பெரிய எதிரிகள் வருவர். கணவன் மனைவி மனஸ்தாபங்கள் உண்டு. வயிறு உபாதைகள் உண்டு. தொழிலில் சிறு பின்னடைவு உண்டு.

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். தாய் வழியில் வரவு உண்டு. புது சொத்துக்கள் வாங்க முயற்சி செய்வீர். வெற்றி உண்டு. தொழிலில் நல்ல லாபம் உண்டு. கோயில் தொண்டுகளில் ஈடுபடுவீர். இருப்பினும் உடல் நலத்தை பார்த்து கொள்ள வேண்டும்.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். மனைவி வழியில் அனுகூலம் உண்டு. சமூகத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். இளைய சகோதரம், குழந்தைகள், மனைவி, நண்பர்கள் உடனான உறவு நன்றாக இருக்கும். சுப விரயங்கள் உண்டு.

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில்  வக்கிரம் பெறுவார்  குரு பகவான். இந்த காலகட்டத்தில்   மனைவி  வழியில் வருவாய் உண்டு. தொழிலில் லாபம் உண்டு. மூத்த சகோதரத்துடன் மன கசப்பு.

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். புதிய சொத்துக்கள் வாங்குவீர். தொழிலில் நல்ல லாபம் உண்டு. ஜீவனம் நன்றாக இருக்கும். நிர்வாக திறன் மேம்படும்.

மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை:

மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.

பரிகாரம்:

சாஸ்தா வழிபாடு நன்மை தரும். நன்றி

Scroll to Top