அன்புள்ள துலாம் ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியம், புத்திரர், கலை, லாபம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். ராகு புத்திர ஸ்தானமான 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் தொடர்பான விஷயங்களில் அதிக நாட்டம் இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவீர்கள். கலை, இலக்கியம், ஆக்கத்திறன் போன்றவற்றில் சிறந்து விளங்குவீர்கள். காதல் விவகாரங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட லாபங்கள் கிடைக்க வாய்ப்புண்டு, ஆனால் கவனமாக இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய பலன்கள் கிடைக்கும். பூர்விக சொத்தில் பிரச்சனை உண்டு. சூதாட்டத்தில் பண இழப்பு உண்டு. தீய பழக்கங்களால் பிரச்சனை உண்டு.
கேது லாப ஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவு இருக்கும், ஆனால் சில சமயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் உறவில் கருத்து வேறுபாடு வரலாம். சமூக வட்டாரத்தில் ஒதுங்கி இருக்க நேரிடும். உங்களின் நீண்ட நாள் ஆசைகளில் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் தடைகள் வரலாம் . எதிர்பாராத வழிகளில் சில ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். வருமானத்தில் ஏற்ற இறக்கங்கள் மாரி மாரி வரும். இருப்பினும் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்:
பூர்வ புண்ணிய ஸ்தான ராகுவால் நற்பலன் பெற, குலதெய்வ வழிபாட்டைத் தொடரவும்.
பிள்ளைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வி மேம்பட, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம். ஆதரவற்ற மாணவர்களுக்கு
உதவலாம்.
பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். திடீர் செலவுகளைத் தவிர்க்கவும். வாரந்தோறும் துர்கை அம்மனை வழிபடலாம்.