அன்புள்ள சிம்ம ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு ஒரு முக்கியமான பெயர்ச்சி, ஏனெனில் கேது உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். கேது 1 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களைப்பற்றியும், உங்கள் அடையாளம் பற்றியும் சிந்திக்கத் தூண்டும். சுயபரிசோதனை அதிகரிக்கும். சில சமயங்களில் தனிமையை விரும்ப நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்கள், மனக்குழப்பங்கள் வரலாம். தன்னம்பிக்கை சற்று குறைய வாய்ப்புண்டு. கர்வம் அதிகரிக்கும். ஓயாது உழைக்க தோன்றும். யாரிடமும் ஓட்ட மாட்டிர்கள். பெயர் புகழ் உண்டு. கணவன் மனைவி ஒரே இடத்தில இருக்க முயற்சிக்க வேண்டும் இந்த காலத்தில்.
ராகு களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி உறவில் சில சவால்களும், எதிர்பாராத நிகழ்வுகளும் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். தொழிலில் கூட்டாளிகளுடன் உறவில் கவனம் தேவை. புதிய கூட்டாளிகள் சேரும் போது எச்சரிக்கை தேவை. திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்க வாய்ப்புண்டு, ஆனால் சில குழப்பங்கள் அல்லது தாமதங்கள் இருக்கலாம். சமூகத் தொடர்புகளில் கவனம் தேவை. தொழிலில் பொருளாதாரம் மிக சிறப்பு. தாயுடன் முரண்பாடு.
பரிகாரம்:
ஜென்ம கேதுவின் தாக்கத்தைக் குறைக்க, விநாயகப் பெருமானை தொடர்ந்து வழிபடவும்.
களத்திர ஸ்தான ராகுவால் உறவுகளில் உண்டாகும் சிக்கல்கள் குறைய, கணவன்/மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து நாக தேவதையை வழிபடலாம்.