அன்புள்ள ரிஷப ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு தொழில் ரீதியாக முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும். ராகு ஜீவன ஸ்தானமான 10 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களின் உத்தியோகம் அல்லது தொழிலில் பெரிய முன்னேற்றத்தைக் தரும். புதிய பொறுப்புகள் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் அமையலாம். பணியிடத்தில் சில சவால்களும் வரலாம், அவற்றைத் திறமையாகக் கையாள்வீர்கள். தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டு, விட்டு கொடுத்து செல்வது நன்று. ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானம் உண்டு.
கேது சுக ஸ்தானமான 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வீடு, வாகனம், சொத்து போன்ற விஷயங்களில் கவலைகளைத் தரலாம். வீட்டுச் சூழலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுமை தேவை. மன அமைதியைக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும். சுகபோகங்களில் நாட்டம் குறையும். தாயாருடன் அனுகூலம் உண்டு. கல்வி சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்:
தொழிலில் மேன்மை பெறவும், தடைகள் நீங்கவும், பைரவர் வழிபாடு செய்வது சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவரை வணங்கலாம்.
பசுமாட்டிற்குப் பழங்கள் அல்லது அகத்திக்கீரை கொடுக்கலாம். வயதான பெண்களுக்கு உதவலாம்.