குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – சிம்மம்

சிம்ம ராசி/லக்ன நண்பர்களே,  உங்கள் ராசிக்கு 5, 8 குரியவரான குரு பகவான்,  11 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 3, 5, 7  ஐ பார்வை இடுகிறார். குழந்தைகள் வழியில் பெயர் புகழ் வருவாய் உண்டு. கலைகள், ஷேர் மார்க்கெட் மற்றும் சூதாட்டங்கள் மீது ஆர்வம் வரும். எண்ணங்கள் ஈடேறும் காலமிது. குலதெய்வ அருள் உண்டு. ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும்.  நண்பர்கள், மூத்த சகோதரம் வழியில் பொருள் உதவி கிடைக்கும். மனைவி/கணவன் வழியில் மேன்மை உண்டு. தாய் மாமா வழியில் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பிரச்சனை உண்டு. கம்யூனிகேஷன் துறை மூலம் லாபம் உண்டு. அரசியல் எண்ணங்கள் வரும்.

மே 14 முதல் ஜூன் 14 வரை:

குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார்.  ஜூன் 6 வரை தாய்க்கு உடல் நல குறைவு உண்டு. பயணம் செல்லும் போது கவனம் தேவை. தூக்கமின்மை இருக்கும்.  பயணங்கள் அதிகரிக்கும். பணி சுமை உண்டு.

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் எதிர் பாலினத்தவரிடம் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் தெரியாதவர்களை அனுமதிக்க கூடாது. கணவன்/மனைவி போதுமான நேரத்தை வீட்டில் செலவிட வேண்டும். கூட்டு தொழிலில் லாபம் உண்டு. நண்பர்கள் வழியில் பண உதவி கிடைக்கும்.

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். குலதெய்வ வழிபாடு சிறப்பை தரும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மிக்க மகிழ்ச்சி.  எண்ணிய காரியங்கள் நிறைவேறும். ஷேர் மார்க்கெட், சூதாட்டங்கள் மூலம் வருவாய் உண்டு. எனினும் சுய ஜாதகத்தை வைத்து முடிவெடுத்து கொள்ளவும். சமூக சேவை ஆர்வம் வரும். காதல் உணர்ச்சிகள் அதிகம் இருக்கும். சிறப்பான காலம் இது.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டம் வீண் விரயங்கள் உண்டு. மருத்துவ செலவு உண்டு. பயணங்கள்  அதிகரிக்கும். மறதி அதிகரிக்கும். பொருட்கள் தொலைந்து போகும். வீடு அல்லது சொத்து வாங்க முயற்சி செய்வீர். எதிரிகள் அதிகமாவர். வேலையில் ஏற்றமுண்டு. உடல் உபாதைகள், நோய், கடன் உண்டு.

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில்  வக்கிரம் பெறுவார்  குரு பகவான். இந்த காலகட்டத்தில்   வெளிநாடு வருமானம் உண்டு. தொழில் மூலம் லாபம் உண்டு. தூக்கமின்மை உண்டு. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டு.

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். பெயர் புகழ் கிடைக்கும். ஆசைகள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் சிறப்பு. குழந்தைகள, மனைவியுடன் செலவிட நேரம் கடிக்கும். பொருள் விரயம் உண்டு.

மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை:

மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.

பரிகாரம்:

சிவ/குலதெய்வ வழிபாடு நன்மை தரும். நன்றி

Leave a Comment

Scroll to Top