மீன ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 1, 10 குரியவரான குரு பகவான், 4 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஐ பார்வை இடுகிறார். தாய்க்கு உடல் நல குறைவு வரும். மற்றவர்களால் எளிதில் ஏமாற்றப்படுவீர். வெளிநாட்டு வாய்ப்புகள்/வருமானங்கள் உண்டு. தனக்கென்று எதுவும் வைத்து கொள்ளாமல் மற்றவர்க்கு கொடுத்து விடுவீர். தொழிலில் வளர்ச்சி நன்றாக இருக்கும். சொத்துக்கள் அடமானம் வைக்க கூடாது. ஆரோக்கிய குறைபாடு உண்டு. உடைமைகள் திருட்டு அல்லது தொலைந்து போகும். சொத்துக்களை மற்றவர் ஆக்கிரமிக்க வாய்ப்புண்டு. கடன் வாங்கினால் வளரும். ஜீவனம் சிறப்பாக இருக்கும். தூக்கம் சீராக இருக்கும்.
மே 14 முதல் ஜூன் 14 வரை:
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை, மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி. தாய் மாமா உறவு நன்றாக இருக்கும். கல்வி நன்றாக இருக்கும். தந்தையுடன் மனக்கசப்பு உண்டு.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் உண்டு. வெளிநாட்டு வருமானம் வரும். சுக போக வாழ்வினை அனுபவிப்பீர். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை குறைவு. தொழிலில் லாபம்.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த கால கட்டம், தொழில் வளர்ச்சி பற்றிய எண்ணங்கள் வரும். நிர்வாக திறன் அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு வரும். சமூக சேவை செய்வீர். சமூக அந்தஸ்து உயரும்.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த கால கட்டம், அறிவாற்றல் அதிகரிக்கும். சொல் வன்மை உண்டு. எதிர்காலம் பற்றிய திட்டங்கள் தீட்டுவீர். தந்தையின் மீது பாசம் அதிகரிக்கும். குழந்தைகளால் பெருமைகள் வரும். இருப்பினும் சிறு சிறு பொருளாதார பிரச்சனைகள் உண்டு.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் குழந்தைகளை பற்றிய கவலை உண்டு. புத்தியால் ஈட்டக்கூடிய வருமானங்கள் உண்டு. கலைகளில் வருமானம் உண்டு. பூர்விக சொத்து கிடைக்கும்.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டத்தில், தாயால் ஆதாயம் உண்டு. கல்வி நன்றாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்று. விரயங்கள் உண்டு.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வார் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
அம்பாள் வழிபாடு நன்மை தரும். நன்றி!