குரு பெயர்ச்சி பலன்கள் மே 14, 2025 – ஜூன் 2, 2026

ஜோதிட நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!   வருகின்ற மே மாதம் 14 ஆம் தேதி, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, குரு பெயர்ச்சி நடக்கவிருக்கின்றது. தேவ குரு, பிருகஸ்பதி, என்று அழைக்கப்படும்  குரு பகவான், தேவர்களின் குருவாகப் போற்றப்படுகிறார். நமக்குள் வரும் நல்எண்ணங்களும், தர்ம சிந்தனைகளுக்கும் காரணமானவர் குரு. இந்த  குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பார்க்க கோடி நன்மை என்பர், மிதுனத்தில் உள்ள குரு பகவான், துலாம், தனுசு மற்றும் கும்ப ராசிகளை பார்வை செய்கின்றார். 

மே 14, மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் குரு பகவான், அக்டோபர் 18 வரை மிதுனத்தில் இருப்பார், பின்பு அக்டோபர் 18 ல் இருந்து டிசம்பர் 5 வரை அதிசாரமாய் கடகத்திற்கு செல்வார். மீண்டும் டிசம்பர் 5 ல் இருந்து ஜூன் 2 வரை மிதுன ராசியில் இருப்பார். இந்த குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம். குருவின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கை, இனிமையானதாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

குருவின் நக்ஷத்திர சஞ்சார விவரங்கள்:

மே 14 to ஜூன் 14 – மிருகசீரிஷம், மிதுனம்

ஜூன் 14 to ஆகஸ்ட் 13 – திருவாதிரை, மிதுனம்

ஆகஸ்ட் 13 to அக்டோபர் 18 – புனர்பூசம், மிதுனம்

அக்டோபர் 18 to நவம்பர் 11 – புனர்பூசம், கடகம்

நவம்பர் 11 to டிசம்பர் 5 – புனர்பூசம், கடகம் வக்ரம்

டிசம்பர் 5 to மார்ச் 11 – புனர்பூசம், மிதுனம் வக்ரம்

மார்ச் 11 – ஜூன் 2 – புனர்பூசம், மிதுனம்

Leave a Comment

Scroll to Top