துலாம் ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 3, 6 குரியவரான குரு பகவான், 9 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஐ பார்வை இடுகிறார். தர்மம் சிந்தனை மேலோங்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவர். தன வரவு அதிகரிக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் உண்டு. தெய்வ மற்றும் குல தெய்வ அனுகூலம் உண்டு. இடம் மாற்றம் உண்டு. சமூக சிந்தனைகள் மேலோங்கும். குழந்தைகளுடன் இணக்கமாக இருப்பீர். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல மரியாதை மதிப்பு கிடைக்கும்.
மே 14 முதல் ஜூன் 14 வரை :
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை பொருளாதர வரவு உண்டு. புது வாய்ப்புகள் தேடி வரும். சுய முயற்சியில் பொருள் ஈட்டுவார்.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் மன போராட்டத்தை சந்தீப்பீர். நல்ல மற்றும் கெட்ட எண்ணங்களுக்கு இடையே ஒரு போராட்டம் நடக்கும். குழந்தைகள் வழியில் அதிருப்தி இருக்கும். இந்த காலத்தில் மனதில் தீய எண்ணங்கள் ஆட்கொள்ளாமல் இருக்க, இறை வழிபாடு தினமும் செய்யுங்கள். தொழிலில் சிறு நஷ்டம் உண்டு.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். வாழ்வில் முன்னேற நிறைய முயற்சிகள் செய்வீர். முயற்சிகளுக்கு தக்க பலன் கிடைக்கும். பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும்.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். சுய முயற்சிகளில் போராட்டம். தொழிலில் சறுக்கல்கள். இருப்பினும் பொருளாதாரம் நன்று.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். பொருளாதாரம் சுமாராக இருக்கும். உறவுகள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. தாய் வழி உறவு சிறப்பு. நோய்/கடன்/எதிரி வளரும்.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். தைரியம் அதிகரிக்கும். இளைய சகோதர உறவு சுமுகமாக இருக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். புகழ் கீர்த்தி உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
சாஸ்தா வழிபாடு நன்மை தரும். நன்றி