அன்புள்ள மிதுன ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு பொதுவாக அனுகூலமான பலன்களையே தரும். ராகு பாக்ய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நீண்ட தூரப் பயண வாய்ப்புகளையும் வழங்கும். உயர் கல்வி குறித்த கனவுகள் நிறைவேறும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வரலாம். தந்தை மற்றும் குருமார்களுடன் கருத்து வேறுபாடு உண்டு. நாத்திக எண்ணங்கள் மேலோங்கும். கடுவுளே இல்லை என்ற எண்ணங்கள் மனதில் ஓடும். வெளிநாட்டு பயணம் உண்டு. குலதெய்வ வழிபாட்டில் தடையுண்டு.
கேது தைரிய ஸ்தானமான 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களின் தைரியத்தையும், துணிச்சலையும் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இளைய சகோதரர்கள் மற்றும் மாமனார் வழியில் விரயங்கள் வரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் பேச்சுத் திறமையால் காரியங்களைச் சாதிப்பீர்கள். எழுத்து, ஊடகம் தொடர்பான துறையினருக்கு அனுகூலம்.
பரிகாரம்:
குலதெய்வ வழிபாடு மிகவும் அவசியம். குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருவது சிறந்தது.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.