அன்புள்ள மீன ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் ராசிக்கு, விரயம், வெளிநாடு, ஆன்மீகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். ராகு விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும் கனவுகள் நிறைவேறும். ஆன்மீகப் பயணங்கள் அல்லது ஆன்மீகச் சிந்தனைகள் மேலோங்கும். தியானம், தர்ம காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அயன சயன சுகத்தில் பற்றின்மை ஏற்படலாம். தனிமையில் செயல்படுவது நன்மை தரும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். தூக்கம் சரியாக இருக்காது. தூக்கத்தில் கெட்ட கனவுகள் வரலாம். சோம்பல் அதிகம் இருக்கும். தொழிலில் லாபம் உண்டு.
கேது ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், கடன், நோய் உண்டு. உடல் உபாதைகள் ஏற்படும். வயிறு பிரச்சனை உண்டு. எதிரிகள் வீழ்வர். வம்பு வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான நிலை ஏற்படும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிலை உயரும்.
பரிகாரம்:
விரய ஸ்தான ராகுவால் செலவுகள் கட்டுக்குள் இருக்க, ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும். ஆன்மீக விஷயங்களுக்காகச் செலவு செய்வது நன்மை பயக்கும்.
ரண, ருண, ரோக ஸ்தான கேதுவால் எதிரிகள் தொல்லை, கடன், நோய் விலக, செவ்வாய்க்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வழிபடவும். முடிந்தால் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவலாம்.