அன்புள்ள மகர ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு தனம், குடும்பம், வாக்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தும். ராகு தன, குடும்ப, வாக்கு ஸ்தானமான 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது உங்களின் சுப செலவினங்களை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புண்டு. பேச்சில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகள் சில சமயங்களில் மற்றவர்களைப் புண்படுத்தலாம். உணவு விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கல்வி தடை உண்டு.
கேது ஆயுள், அஷ்டம ஸ்தானமான 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சில திடீர் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளைக் கொண்டு வரலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மறைமுகமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். கூட்டுத் தொழில், பங்குச் சந்தை போன்ற விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. வம்பு வழக்குகள் வர வாய்ப்புண்டு. சில சமயங்களில் பயம் அல்லது கவலைகள் ஏற்படலாம். ஆன்மீகம் மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.
பரிகாரம்:
தன, குடும்ப ஸ்தான ராகுவால் பணவரவு சீராக, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ, குடும்பத்துடன் சேர்ந்து குலதெய்வ வழிபாடு செய்யலாம். பண விஷயங்களில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும்.
அஷ்டம ஸ்தான கேதுவால் திடீர் சிக்கல்கள், ஆரோக்கியப் பிரச்சினைகள் குறைய, லட்சுமி நரசிம்மரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மந்திரங்களை ஜபிக்கலாம்.
வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும்.