ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 – கும்பம்

அன்புள்ள கும்ப ராசி நண்பர்களே, இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்கள் ராசியிலேயே ராகு சஞ்சரிப்பதால் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும். ராகு 1 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது, உங்களின் ஆசைகளையும் லட்சியங்களையும் அதிகரிக்கும். உங்களைப் பற்றிய சிந்தனை மேலோங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகளைத் துணிச்சலுடன் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. சில சமயங்களில் குழப்பமான மன நிலை ஏற்படலாம். உங்களின் தோற்றம் அல்லது நடவடிக்கைகளில் மாற்றம் உண்டாகலாம். பழக்க வழக்கங்களில் கவனம் தேவை. அவசர குணம், முன் கோபம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். சுக போக வாழ்வினை விரும்புவீர்.

கேது களத்திர ஸ்தானமான 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கணவன்-மனைவி உறவில் சில சவால்கள் ஏற்படலாம். அந்நியோன்யம் குறைய வாய்ப்புண்டு. விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு வரலாம். பொது வாழ்க்கையில் ஆர்வம் குறையும். சமூகத்தில் ஒதுங்கி இருக்க நேரிடும். திடீர் பிரிவினைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். பொறுமையுடனும், புரிதலுடனும் செயல்படுவது அவசியம்.

பரிகாரம்:

ஜென்ம ராகுவின் தாக்கத்தைக் குறைக்க, உங்களைப் பற்றியே சிந்திப்பதைச் சற்று குறைத்து, சமூகத்திற்குப் பயனுள்ள செயல்களில் ஈடுபடலாம். உணவு தானம் செய்யலாம்.

களத்திர ஸ்தான கேதுவால் உறவுகளில் உண்டாகும் சிக்கல்கள் குறைய, வாழ்க்கைத் துணையுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். இருவரில் ஒருவர் நாக தேவதையை வழிபடுவது சிறப்பு.

வாரந்தோறும் சனிக்கிழமை அல்லது ராகு காலத்தில் துர்கை அம்மனை வழிபடவும்.

Leave a Comment

Scroll to Top