மிதுன ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 7, 10 குரியவரான குரு பகவான், மிதுன ராசியிலேயே பெயர்ச்சி செய்கிறார். உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஐ பார்வை இடுகிறார். அந்தஸ்து, கௌரவம், மரியாதை சமூகத்தில் கிடைக்கும். மனைவி நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. தேடி வந்து உதவி செய்வர். அதனால், பொருள் விரயம் உண்டு. தர்ம சிந்தனை மேலோங்கும். குழந்தைகள் வழியில் பெயர் புகழ் உண்டு. தந்தை வலி உறவு நன்று. கோவம் அதிகம் வரும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். மற்றவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டாம், எளிதாக ஏமாற்றி விடுவர். திருமணத்திற்கு வரன் தேடினால், வரன் தானாக தேடி வரும். தந்தை, குழந்தைகள், மனைவி வழியில் செலவுகள் உண்டு.
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை:
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை கணவன் மனைவிக்குள் சண்டை, நண்பர்களுடன் கருது வேறுபாடு, கூட்டு தொழிலில் விரயம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை. தலை பகுதியில் காயம் படாமல் பார்த்து கொள்ள வெண்டும். கோவத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும். வீண் பிரச்சனைகள் தேடி வரும். கோவத்தில் வார்த்தைகளை கவனமாக பயன் படுத்த வேண்டும்.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இன்ப சுற்றுலா செல்ல வாய்ப்புண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். நாத்திக சிந்தனைகள் மேலோங்கும். உயர் கல்வி படிக்கலாம். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு உண்டு. சமூக சேவை, கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் போது, பணத்தை கையாள்வதில் நேர்மை மற்றும் கவனம் தேவை. பொருளாதார வரவு உண்டு இந்த காலத்தில்.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை :
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் மனைவி வழி உறவு சிறப்பாக இருக்கும். இருந்தாலும் சற்று கவனம் தேவை. வெளியுலக நட்புகள் விரிவடையும். கூட்டு தொழில் கூடாது. பொருள் விரயம் உண்டு.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். பண வரவு அதிகரிக்கும். வேலை தொழில் நன்றாக இருக்கும், தேவைக்கேற்ப வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் உண்டு.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் குடும்ப உறவுகள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதர விரயம் உண்டு. உடல் நலத்தில் கவனம் தேவை குறிப்பாக கண், முகம், வாய், பல் தொடர்பான பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். கணவன் மனைவி உறவுக்குள், நண்பர்களுடன் பணத்தால் பிரச்சனை. பொருளாதர வரவு நன்றாக இருக்கும். ஆதாயங்கள் தேடி வரும். பங்கு சந்தை, சூதாட்டங்கள் மூலம் வரவு உண்டு.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
அம்பாள் வழிபாடு நன்மை தரும். நன்றி