தனுசு ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 1, 4 குரியவரான குரு பகவான், 7 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 1, 3, 11 ஐ பார்வை இடுகிறார். மனைவிக்கு அதிக ஆன்மீக ஈடுபாடு வரும். அதனால் கணவன் மனைவிக்குள் இடைவேளை. கூட்டு தொழிலால் லாபம். வெளியுலக தொடர்புகள் நன்றாக இருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருவர். சிறுநீர் சார்ந்த உடல் உபாதை உண்டு. செய்யும் முயற்சிகளில் நல்ல லாபம். சகோதரம், சித்தப்பா வழியில் பொருள் வரவு உண்டு. பொருளாதார சிந்தனைகள் மேலோங்கும். பொது சேவையில் ஆர்வம் வரும். பயணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவு உண்டு.
மே 14 முதல் ஜூன் 14 வரை:
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை, மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை கணவன் மனைவிக்குள் கருத்து
வேறுபாடுகள். நண்பர்களுடன் பிரச்சனை. தொழிலில் வாடிக்கையாளர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் வீண் பிரச்சனை வரும். சிறுநீர் தொந்தரவு அல்லது உபாதை உண்டு. பொருளாதாரம் நன்று ஆனால் வீண் பிரச்சனை உண்டு.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் ஆசைகள் அதிகரிக்கும்.
தந்தை, இளைய சகோதரருடன் கருத்து வேறுபாடு. புதிய முயற்சிகள் மேற்கொள்வீர். சிறிது சிந்தித்து செயல்பட வேண்டும். அதீத ஆசையினால் சில முயற்சிகள் தவறாகலாம்.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த கால கட்டம், ஜாதகருக்கு கூட்டு தொழில் எண்ணங்கள் வரும். கூட்டு தொழிலில் லாபம் உண்டு. தொழிலில் புதிய வாடிக்கையாளர்களை தேடி செல்வீர், லாபம் உண்டு அதனால். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டு.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த கால கட்டம், உடல் நல குறைவு ஏற்படும். கடன் அதிகரிக்கும். வீண் விரயங்கள் ஏற்படும். நிறைய செலவுகள் செய்ய யோசிக்க மாட்டீர்கள். தாயாருக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தாயாரால் லாபம் உண்டு. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கும்.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் பொருளாதார வரவு அதிகரிக்கும். எதிர்பாராத தன வரவு உண்டு. தாய் வழியில் ஆதாயம் உண்டு. பயணங்களில், உயரமான இடங்களில் நிற்கும் போது கவனம் தேவை.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டத்தில், கணவன்/மனைவியை நாடி செல்வீர். ஆனால் அவர்களின் அன்பு முழுவதுமாக கிடைக்காது. சகோதரம் மற்றும் சித்தப்பா வழியில் மகிழ்ச்சி உண்டு. கூட்டு தொழிலில் நஷ்டம். புதிதாக
யாரையும் நம்பி முதலீடு செய்யக்கூடாது ஏமாற்றிவிடுவர்.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
முருகபெருமான் வழிபாடு நன்மை தரும். நன்றி!