கும்ப ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 2, 11 குரியவரான குரு பகவான், 5 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 9, 11, 1 ஐ பார்வை இடுகிறார். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி. நல்ல எண்ணங்களால் மனம் நிறைந்திருக்கும். சமூக சேவைகளில் அதிக ஈடுபாடு வரும். கல்வியில் சிறப்பு. காதலில் வெற்றி. பூர்விகத்தை விட்டு வெளியில் இருப்பவர்கள், பூர்விகத்திற்கு திரும்ப செல்லும் எண்ணங்கள் மேலோங்கும். புத்தி கூர்மை அதிகரிக்கும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. குழந்தைகள் பற்றிய கவலை மனதை ஆக்கிரமிக்கும். கலைதுறை நாட்டம் அதிகரிக்கும். தந்தை, சகோதருரடன் உறவு நன்றாக இருக்கும். கீர்த்தி உண்டு. குல தெய்வ அருள் உண்டு.
மே 14 முதல் ஜூன் 14 வரை:
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை, மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை பணி சுமை அதிகரிக்கும். வேலையில் மாற்றங்கள் உண்டு. நோய்/கடன் உண்டு. திருமண வாழ்வில் பிரச்சனைகள். தொழிலில் பிரச்சனை. குழந்தைகளுக்கு நோய் உண்டு.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் எழும். பெயர் புகழ் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கணவன் மனைவி வெவ்வேறு இடங்களில் இருந்தால் இந்த கால கட்டத்தில் ஒரே இடத்தில இருக்க முயற்சிக்க வேண்டும்.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த கால கட்டம், புத்தி சாதுர்யம் அதிகரித்து காணப்படும். மனித நேயம் அதிகரிக்கும். அரசியல் ஆர்வம் வரும். உள்ளுணர்வு பலமாக இருக்கும். சூதாட்ட எண்ணங்கள் மனதில் வரும். குழந்தைகளை பற்றிய கவலை இருக்கும்.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த கால கட்டம், திடீர் பண வரவு உண்டு. மனதில் தீய எண்ணங்கள் ஆட்கொள்ளும். மற்றவர்களை நம்பி ஏமாறுவர். அதனால் கடன், மன கவலை ஏற்பட வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டு.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் பொருளாதாரம் சிறப்பு. வேலையில் ஏற்றம் உண்டு. இருப்பினும் கடன் உண்டு. தொழிலில் வளர்ச்சி. சுப விரயங்கள் உண்டு.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டத்தில், குழந்தைகள் வழியில் பொருளாதாரம் விரயம். திடீர் பண வரவு உண்டு. தொழில் பொருளாதார வரவு உண்டு. சமுதாயத்தில் அந்தஸ்து உண்டு.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வார் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
மாயோன் வழிபாடு நன்மை தரும். நன்றி!