குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – மகரம்

மகர ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 3, 12 குரியவரான குரு பகவான், 6 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 10, 12, 2 ஐ பார்வை இடுகிறார். சோம்பல் அதிகமாக இருக்கும். நோயால் கடன் உண்டு. உத்தியோகம் சிறப்பாக இருக்கும். பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்புண்டு. இனிப்பு உணவுகளை விரும்பி உண்பர். பொருட்கள் திருட்டு போகும் அல்லது தொலையும். செய்யும் காரியங்களில் வெற்றியுண்டு. தொழிலில் பெரிய லாபம் இல்லை. சமூக அந்தஸ்து உயரும். தந்தையின் வருமானம் அதிகரிக்கும். சரியான தூக்கம் இருக்காது. சுப விரயங்கள் உண்டு. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகளுக்கு பிறகு மகிழ்ச்சி. வலது கண், பற்கள் மற்றும் முகம் சம்பந்தப்பட்ட நோய் உண்டு. உணவு பழக்கங்களில் கவனம் தேவை இல்லையெனில் உடல் பருமன் ஆகும்.

மே 14 முதல் ஜூன் 14 வரை:

குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை, மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு பிரச்சனை. கூட்டு தொழிலில் லாபம். நண்பர்கள், சகோதரர் வழியில் பிரச்சனை.

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் குடும்பத்தில் மனஸ்தாபங்கள் உண்டு. கொடுத்த வாக்கினால் பிரச்சனை. ஆரம்ப கல்வி பயில்வோர்க்கு தடை அல்லது மந்த தன்மை. பொருள் விரயம் உண்டு.

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த கால கட்டம், மருத்துவ செலவு உண்டு. கடன் உண்டு. பொருள்கள் தொலைந்து போகும். தொழிலில் விரயம் உண்டு. குடும்பத்தில் ஓர் விரயம் உண்டு.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த கால கட்டம், கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டு. இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. பெயர் புகழ் உண்டு. ஓயாமல் உழைப்பார். ஆரோக்கிய குறைபாடு உண்டு. நிறைய பணம் செலவு செய்வார். கூட்டு தொழிலில் நஷ்டம் உண்டு.

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் தொழிலால் லாபம். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு. சமூகத்தில் சந்திக்க கூடிய நபர்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு வருமானம் உண்டு.

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டத்தில், தொழில் பிரச்சனை, கடன் அதிகரிக்கும் , வயிறு சம்பந்தப்பட்ட ரோகம் உண்டு. குடும்பத்தில் பிரச்சனை, பொருளாதார விரயம் உண்டு.

மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை:

மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வார் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.

பரிகாரம்:

அம்பாள் வழிபாடு நன்மை தரும். நன்றி!

Leave a Comment

Scroll to Top