குரு பெயர்ச்சி பலன்கள் 2025 – விருச்சிகம்

விருச்சிக ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 2,5 குரியவரான குரு பகவான், 8 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 12, 2, 4 ஐ பார்வை இடுகிறார். LIC, PF , Gratuity , உயில் சொத்து கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டு. தெரிந்தே செய்கின்ற தவறுகளினால் குடும்பத்தில் அவ பெயர் உண்டு. குழந்தைகளுடன் மன கசப்பு உண்டு. குடும்பத்தில் மனஸ்தாபங்கள் வரும். உடல் உபாதைகள் உண்டு. உடலில் கட்டிகள் உருவாகும். உணவு சரியான நேரத்திற்கு எடுத்து கொள்ள வேண்டும். வயிறு கோளாறுகள் உண்டு. மற்றவரிடம் எந்த பொருளும் வாங்காதீர், தொலைத்து விடுவீர்கள், கவனமாக இருக்க வேண்டும். தவறான வழியில் பணம் ஈட்ட வாய்ப்பு கிடைக்கும் தவிர்த்து விடுங்கள் அந்த வாய்ப்புகளை. கணவன் மனைவி பிரச்சனையில், மனைவி தாலியை கலட்டி போட்டு விடுவார். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. விட்டு கொடுத்து செல்வது நன்று, இல்லையெனில் வழக்கு வரும்.

மே 14 முதல் ஜூன் 14 வரை:

குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை, மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை தந்தையுடன் மனக்கசப்பு. கோயில் பயணம் உண்டு. எதிர்மறையான சிந்தனைகள் வரும். ஆராய்ச்சி மேற்படிப்புகளில் ஆர்வம் வரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உடைமைகள் திருட்டு போகும்.

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:

ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் உடல் சுகம் கெடும். ஒழுக்கமாக இல்லை என்றால் அவ பெயர் உண்டு. சொத்துக்கள் வாங்க வாய்ப்புண்டு. தாய் வழியில் நன்மை உண்டு.படிப்பில் மந்தம். புதிய பழக்கங்கள் வரும்.

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:

ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த கால கட்டம், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டு. பொருளாதார வரவு உண்டு. ஆரம்ப கல்வியில் தடை. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததால் அவ பெயர் உண்டு. முகம் மற்றும் பற்கள் சம்பந்தமான பிரச்சனை உண்டு.

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:

அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த கால கட்டம், எதிர்பாரா அதிஷ்டம் உண்டு. குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டு. காதல் எண்ணம் மேலோங்கும். தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மீக எண்ணங்கள் வரும். பெயர், புகழ் உண்டு. புது முயற்சிகள் மேற்க்கொள்வீர். புதிய கலைகள் கற்றுக்கொள்ள ஆர்வம் வரும். பூஜை, த்யானம் போன்றவைகளில் மனம் ஈடுபடும். உள்ளுணர்வு நடக்கப்போவதை முன்பே உணர்த்தும்.

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:

நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் தந்தை வழியில் தன வரவு உண்டு. மனம் பணம் சம்பாதிப்பதில் அதிகம் ஆர்வம் காட்டும். முயற்சிகளில் வெற்றி உண்டு. இட மாற்றம் உண்டு. குழந்தைகளுடன் மனக்கசப்பு.

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:

டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டத்தில், கடன், நோய், வீண் பிரச்சனைகள் உண்டு. அவ பெயர் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை. தூக்கமின்மை, விரயங்கள் உண்டு. அன்னையின் உடல் நலம் கெடும். மொத்தத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை:

மார்ச் 11 2026 முதல் ஜூன் 2 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.

பரிகாரம்:

குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும். நன்றி!

Leave a Comment

Scroll to Top