கடக ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 6,9 குரியவரான குரு பகவான், 12 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஐ பார்வை இடுகிறார். கோவில் பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். பணம்/நகை வைத்த இடம் மறந்து போகும் அல்லது தொலையும். தூக்கம் சரியாக இருக்காது. மருத்துவ செலவுகள் வரும். வயிறு தொடர்பான பிரச்சனை உண்டு. மனைவிக்கு உடல் உபாதைகள் வரும். கடன் வாங்க கூடாது இந்த காலகட்டத்தில். உயரமான இடங்களில் நிற்கும் போது கவனமாக இருக்க வேண்டும். வாகனம்/வீடு வாங்கும் யோகம் உண்டு. நோய்/கடன் வளரும் எனவே அதனை கட்டுக்குள் வைத்திட வேண்டும். வெளிநாட்டு பணம் வரும். உயில் சொத்துக்கள் கிடைக்கும். பிரச்சனைகளும் உண்டு. வேலை நன்றாக இருக்கும். நீர் நிலைகளை கவனம் தேவை.
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை :
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை குழந்தைகள் மீது ஒரு கண் வைத்து கொள்ள வேண்டும், குழந்தைகள் வழியில் மன கசப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. மனதில் அமைதி இருக்காது, ஒரு கவலை இருந்து கொண்டே இருக்கும். சூதாட்டங்களில் பணம் செலவிடுவதை தவிர்க்கவும்.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த கால கட்டத்தில் எது செய்தாலும் கவனத்துடன் செய்ய வேண்டும். கெட்ட கனவுகள் வரும். எதை பற்றியாவது பயம் இருந்து கொண்டே இருக்கும். உடைமைகள் திருட்டு போகும், பயணம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். கடனுக்கு வட்டி பணத்தை சரியாக கட்டி விட வேண்டும் இல்லையென்றில், வட்டிக்கு வட்டி கட்ட வைத்து விடும். பொருளாதர இழப்பு உண்டு. சக்திக்கு மீறிய எந்த ஒரு காரியத்தையும் செய்ய கூடாது.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். நோய்/கடன் வரும். மனைவியுடன் வாக்கு வாதங்கள், பிரச்சனை உண்டு. தொழிலில் நஷ்டம். நிறைய எதிரிகளை சம்பாதிப்பீர். நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் காலகட்டம் இது, அதனால் பொறுமையுடன் அனுசரித்து செல்ல வேண்டும் அனைத்தையும்.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டம் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் விலகும். கௌரவம், மகிழ்ச்சி கிடைக்கும். தர்ம சிந்தனைகள் மேலோங்கும். உறவுகள் வழியில் பொருளாதர வரவு உண்டு. நீங்கள் உறவுகளிடம் கடுமையாக நடந்து கொள்வீர். பண வரவு உண்டு.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த காலகட்டத்தில் உறவுகள் வழியில் சுப செலவுகள் உண்டு. உறவுகள் வழியில் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகள், மனைவி மற்றும் தந்தை வழியில் சிறப்பு.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். உடல் நலத்தில் கவனம் தேவை. வயிறு ரோகம் உண்டு. மருத்துவ செலவு உண்டு. அடிக்கடி பயணம் செய்ய நேரிடும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு பிரச்சனைகள் உண்டு.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
முருக வழிபாடு நன்மை தரும். நன்றி