ரிஷப ராசி/லக்கின நண்பர்களே, உங்கள் ராசிக்கு 8,11 குரியவரான குரு பகவான், 2 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஐ பார்வை இடுகிறார். கண், பல், சரும பிரச்சனைகள் உண்டு. கோவம் அதிகம் வரும். கோவத்தில் எதுவும் பேச வேண்டாம், அமைதியாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் உண்டு. பேச்சில் விரக்தி இருக்கும். பொருளாதார இழப்பு உண்டு. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆரம்ப கல்வி பயிலும் குழந்தைகள் மந்த தன்மை இருக்கும். கடன் வாங்க கூடாது, வாங்கினால் வளரும். உடல் நலத்தில், உணவு பழக்கத்தில் கவனம் தேவை. எதிரிகள் அதிகமாவர். வேலை தொழில் நன்றாக இருக்கும். சூதாட்டங்களில் ஈடு பட கூடாது. ஆய்வு கல்விக்கு நன்று. சமூகத்தில் உயர்வு உண்டு.அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.
மே 14 முதல் ஜூன் 14 வரை:
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை கணவன் மனைவி பிரச்சனைகள் வரும். நண்பர்களுடன் மன கசப்பு, பொருள் விரயம் உண்டு. கூட்டு தொழில் நஷ்டம் தரும். உயிர் பயம் உண்டு. முருக பெருமானை வழிபடுவதன் மூலம் மேற்கூறிய பிரச்சனைகள் விலகும்.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இங்கு தொழில் மூலம் பொருள் வரவு உண்டு. முறையற்ற வழிகள் மூலம் பணம் ஈட்ட தோன்றும். தொழிலை பெரிதாக விரிவு படுத்த எண்ணங்கள் தோன்றும். வேலையில் ஊதிய உயர்வு உண்டு. இருப்பினும் உறவுகளிடம் விட்டு கொடுத்து செல்வது நன்று.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த கால கட்டம், குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்கும். கடன் சுமை அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சனைகள் தேடி வரும். கணவன் மனைவி வாக்குவாதங்களை தவிர்க்கவும். யாரிடமும் எதிர்மறையாக பேச வேண்டாம். உடல் உபாதைகள் உண்டு. உடல் ரீதியாக பிரச்சனை வந்தால் உடனே கவனிக்கவும். குருமார்கள் மூத்தவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இங்கு எதிர்பாரா அதிஷ்டம் உண்டு. இளைய சகோதரம், மாமனார் வழியில் வரவு உண்டு. கழுத்து வலி, ENT பிரச்சனை வரும். வாகனங்களில் செல்லும் பொது கவனம் தேவை. தன்னை தானே காய படுத்தி கொள்வர். மனைவி, நண்பர்கள், தந்தை, சித்தப்பா வழியில் பொருளாதார வரவு உண்டு. இடம் மற்றம் உண்டு. முயற்சிகளில் வெற்றி உண்டு.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் தைரியம் அதிகரிக்கும். பொருள் விரயம் உண்டு. நோய் குணமாகும். புகழ், கீர்த்தி உண்டு. காதல் எண்ணம் மேலோங்கும். குடி இருக்கும் வீட்டில், புதிய மாற்றங்கள், பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டத்தில், எதிர்பாரா பண வரவு உண்டு. PF , இன்சூரன்ஸ் பணம், உயில் சொத்துக்கள் கிடைக்கும். வேலை, தொழிலில் வருமானம் போதுமானதாக கிடைக்கும். பயணம்களில் கவனம் தேவை.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
சிவ வழிபாடு நன்மை தரும். நன்றி