மேஷ ராசி/லக்ன நண்பர்களே, உங்கள் ராசிக்கு 9,12 குரியவரான குரு பகவான், 3 ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஐ பார்வை இடுகிறார். இதனால் மனைவி, தந்தை , மூத்த சகோதரம், சித்தப்பா மற்றும் நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. இந்த உறவுகள் வழியில் சுப விரயம் உண்டு. கோயில் பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டு. தர்ம சிந்தனைகள் மேலோங்கும். பொது தொண்டில் ஈடுபாடு வரும். இளைய உடன்பிறப்பு வழியில் சிறு மனஸ்தாபங்கள் உண்டு. ENT பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. காரிய தடைகள் உண்டு. நண்பர்கள் வழியில் கூட்டு தொழில் செய்ய கூடாது. இடமாற்றம் உண்டு. சமூக ஊடக பதிவுகளை கவனமாக செய்ய வேண்டும். இசை மீது ஆர்வம் அதிகரிக்கும்.
மே 14 முதல் ஜூன் 14 வரை:
குரு பகவான் மே 14 முதல் ஜூன் 14 வரை, மிருகசீரிஷ நக்ஷ்த்திரத்தில் சஞ்சரிப்பார். ஜூன் 6 வரை வாகனங்களில் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும். டாக்குமெண்ட்களை கவனமாக கையாள வேண்டும். இளைய உடன்பிறப்புகளுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். முக்கியமான முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தேவை இல்லாத பயம் உண்டு. முருக வழிபாடு நன்று.
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை:
ஜூன் 14 ல் இருந்து ஆகஸ்ட் 13 வரை திருவாதிரை நக்ஷத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிப்பார். இந்த காலகட்டத்தில் எதிர் பாலினத்தவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மனைவி, சகோதரம் மற்றும் தந்தை வழியில் மனக்கசப்பு. கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். பண வரவு உண்டு. மனதில் எழும் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்க துர்க்கை வழிபாடு மற்றும் குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்று.
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை:
ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை குரு பகவான் புனர்பூச நக்ஷத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த கால கட்டம், அருமையான காலம். உறவுகள் வழியில் மன மகிழ்ச்சி உண்டு. பணம் கொடுக்கல் வாங்கல் மட்டும் கவனம் தேவை. சுற்றுலா பயணம் செல்ல வாய்ப்புண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு. குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்று.
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை:
அக்டோபர் 18 முதல் நவம்பர் 11 வரை அதிசாரமாக கடகத்தில் புனர்பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த கால கட்டம், உடல் நலத்தில் அக்கறை தேவை. தாய்க்கு உடல் நல குறைவு உண்டு. தொழிலில் நல்ல வரவு உண்டு. கல்வியில் மந்தம் இருக்கும் கவனமாக படிக்கவும்.நீர் நிலைகள் செல்லும் பொது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை:
நவம்பர் 11 முதல் டிசம்பர் 5 வரை கடக ராசியில் புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிரம் பெறுவார் குரு பகவான். இந்த கால கட்டம் பொருள் விரயம் உண்டு. புது வாகனம் அல்லது சொத்து வாங்க வாய்ப்புண்டு. கல்வி செலவு உண்டு. மருத்துவ செலவு உண்டு.
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை:
டிசம்பர் 5 முதல் மார்ச் 11 2026 வரை, மீண்டும் மிதுன ராசி பூனர்பூச நக்ஷத்திரத்தில் வக்கிர கதியில் சஞ்சரிப்பார் குரு பகவான். இந்த காலகட்டத்தில், பொருளாதார வரவு உண்டு. மறதி உண்டு. நரம்பு, ENT பிரச்சனைகள் வரும். உடல் நலத்தில் கவனம் தேவை.
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை:
மார்ச் 11 2026 முதல் ஜூன் 11 2026 வரை, புனர்பூச நக்ஷத்திரத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் செல்வர் குரு பகவான். இங்கு ஆகஸ்ட் 13 ல் இருந்து அக்டோபர் 18 வரை கூறியவாறே இருக்கும்.
பரிகாரம்:
குருமார்கள் மற்றும் குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும். நன்றி!